/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு
/
ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு
ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு
ஸ்டேஷனில் கைதி இறந்த வழக்கு ஜன. 27க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜன 07, 2025 04:30 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி வெங்கடேசன் 26, இறந்த வழக்கு விசாரணையை ஜன., 27 க்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
மதுரையைச் சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன். இவரை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு 2012- அக்., 2- பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷனில் அவர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் தாக்கியதில் அவர் இறந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
இவ்வழக்கில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
ஓய்வு பெற்ற முனியசாமி ஜாமினில் வந்த பின் உடல் நலக்குறைவால் இறந்தார். இவ்வழக்கில் ஏட்டு பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல், ஆப்பநாடு கோதண்டராமன் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோதண்டம், ஞானசேகரன், கிருஷ்ணவேல் ஆகியோர் ஆஜராயினர். விசாரணையை ஜன., 27 க்கு நீதிபதி மெகபூப் அலிகான் தள்ளி வைத்தார்.