ADDED : செப் 04, 2026 03:25 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, பொட்டிதட்டியைச் சேர்ந்தவர் திருப்பதிகுமார், 40. இவர், 2020ல், மனைவி சங்கீதாவை கொலை செய்ததால், ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆக., 29ல் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மீண்டும் சிறைக்கு, பரமக்குடி எஸ்.ஐ., தினகரன், ஏட்டு நீலாதேவி ஆகியோர், அவரை அழைத்து சென்ற போது, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறினார்.
அவருக்கு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சை அளித்த பின், ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் அருகே நடந்து வந்தபோது, போலீசாரை ஏ மாற்றிவிட்டு திருப்பதிகுமார் தப்பி ஓடினார்.
பஜார் போலீசார், ஐந்து நாட்களாக தேடியும் அவர் சிக்கவில்லை. பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, தினகரன், நீலாதேவி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
