/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்கம்பங்களில் கட்டப்படும் தனியார் விளம்பர பதாகைகள் மின் ஊழியர்கள் அவதி

ADDED : மே 20, 2025 11:24 PM
சிக்கல், : சிக்கல், ஏர்வாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்களிலும் தனியார் நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.
மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: வணிக நிறுவனங்களின் விளம்பர பதாகைகளை மின்கம்பத்தின் பத்தடி உயரமுள்ள பகுதியில் இரும்பு கம்பியால் பிணைத்து வைத்து கட்டுகின்றனர்.
இதனால் விளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை மாற்றுவதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து மின்கம்பங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றனர்.