/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்து: டிரைவர் பலி
/
ஆட்டோ மீது தனியார் பஸ் மோதி விபத்து: டிரைவர் பலி
ADDED : ஆக 20, 2025 11:29 PM
பரமக்குடி : -பரமக்குடி அருகே பார்த்திபனுார் பகுதி நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது தனியார் பஸ் மோதிய விபத்தில், ஆட்டோ டிரைவர் பலியனார்.
பார்த்திபனுார் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் ஆட்டோ டிரைவர் பாலகிருஷ்ணன் 43. இவரது மனைவி மேகலா 38, போலீசாக பணி புரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது ஆட்டோவில் வடக் கூரில் இருந்து தனியாக வந்தார்.
அப்போது மதுரையில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த தனியார் பஸ் ஆட்டோ மீது மோதியது.
ஆம்புலன்ஸ் 108 மூலம் பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பாலகிருஷ்ணன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பஸ் டிரைவர் இடைக்காட்டூர் கர்ணன் மீது பார்த்திபனுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிந்தார்.