ADDED : மார் 17, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துார், சாயல்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து கிராமங்களுக்கு தனியார் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் அதிவேகமாக சென்று அடிக்கடி விபத்தை ஏற்படுத்துகிறது. அதிக நபர்களை ஏற்ற வேண்டும் என்பதற்காக நகர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக இயக்கப்படுகிறது.
மேலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரனை பயன்படுத்துகின்றனர்.தனியார் பஸ்களில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்தி போலீசார், போக்குரவத்து துறையினர் கண்காணிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
