/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் அதிவேகமாக தனியார் பஸ்கள்
/
ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் அதிவேகமாக தனியார் பஸ்கள்
ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் அதிவேகமாக தனியார் பஸ்கள்
ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் அதிவேகமாக தனியார் பஸ்கள்
ADDED : டிச 24, 2024 04:21 AM
அச்சமடையும் பாதசாரிகள்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் நகர் பகுதியில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வதால் ரோட்டில் நடந்து செல்லும் பாதசாரிகளும், டூவீலர் ஓட்டுநர்களும் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
நுாறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் திகழ்வதால் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதிக்கு வந்து செல்கின்றனர். அதிக பயணிகள் வந்து செல்லும் பகுதியாக ஆர்.எஸ்.மங்கலம் திகழ்வதால் பல்வேறு நகரங்களில் இருந்து அரசு பஸ்கள் மட்டுமின்றி தனியார் பஸ்களும் அதிகளவில் வந்து செல்கின்றன.
இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி பரமக்குடி ரோடு, டி.டி.மெயின் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்வது கடந்த சில மாதங்களாக தொடர்கிறது. இதனால் டவுன் பகுதியில் ரோடுகளில் நடந்து செல்லும் பாதசாரிகளும், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும் கடுமையாக அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட போலீசார் அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.