/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனியார் நிறுவன பணியாளருக்கு வாளால் வெட்டு : 3 பேர் கைது
/
தனியார் நிறுவன பணியாளருக்கு வாளால் வெட்டு : 3 பேர் கைது
தனியார் நிறுவன பணியாளருக்கு வாளால் வெட்டு : 3 பேர் கைது
தனியார் நிறுவன பணியாளருக்கு வாளால் வெட்டு : 3 பேர் கைது
ADDED : மே 06, 2025 06:06 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் தனியார் நிறுவன பணியாளரை நீண்ட வாளால் வெட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
உச்சிப்புளி அருகேயுள்ள இருமேனி பகுதியை சேர்ந்த சீனிமுகமது என்பவரின் மகன் முகமது நியாஸ் 30. இவர் தற்போது ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்து வருகிறார்.
அய்யாக்கண்ணு தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிகரெட் விற்பனை மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் நியாஸ் பணி முடித்து டூவீலரை எடுக்க சென்றார்.
அவ்விடத்தில் ராமநாதபுரம் வடக்குத்தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மகன் செல்வமணிகண்டன் மது குடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த முக மது நியாஸ் பொது இடத்தில் மது குடிக்க கூடாது, என கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த செல்வ மணிகண்டன் தனது நண்பர்கள் குண்டுக்கரை முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் குமரன் 20, பெருங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சிலம்பரசன் 20, ஆகியோரை அலைபேசியில் அழைத்துள்ளார்.
மூவரும் சேர்ந்து முகமது நியாைஸ நீண்ட வாள், இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். காயமடைந்த முகமது நியாஸ் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பஜார் போலீசார் செல்வமணிகண்டன், குமரன், சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர்.