/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 492 பேருக்கு பணி நியமனம்
/
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 492 பேருக்கு பணி நியமனம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 492 பேருக்கு பணி நியமனம்
தனியார் வேலைவாய்ப்பு முகாம் 492 பேருக்கு பணி நியமனம்
ADDED : ஜூலை 26, 2025 11:34 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 492 பேருக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்பணி நியமன ஆணை வழங்கினார்.
ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்புமுகாமில் 108-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. பள்ளிக் கல்வி தகுதி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி படித்த 2212 பேர் கலந்து கொண்டனர்.
கல்வித்தகுதி, முன் அனுபவம் அடிப்படையில் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். மொத்தமாக 492 பேர் நேரடி பணி நியமனமும், 182 பேர் பணிக்கான பயிற்சி பெறுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு போதிய பயிற்சி வழங்கிய பின் பணிநியமனம் செய்யப்படுவர்.
விரைவில் பரமக்குடி: முகாமை ஆய்வு செய்த கலெக்டர் சிம்ரஜீத் சிங் காலோன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் இருந்து தனியார் நிறுவனங்கள் வரவழைக்கப்பட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு நடந்த முகாமில் 96 நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் சுமார் 400 பேருக்கு உடனே வேலை வழங்கப்பட்டது. தற்போது நடக்கும் முகாமில் 108 நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. விரைவில் பரமக்குடி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார், கல்லுாரி முதல்வர் மீரா, அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.