ADDED : மே 21, 2026 04:25 AM
ராமநாதபுரம்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் (மே 22ல்) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில், தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையானவர்களை தேர்வு செய்யலாம்.
பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலை தேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பு பெறலாம்.
விருப்பமுள்ளவர்கள் தங்களின் சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார், ரேஷன் கார்டுகள் போட்டோக்களுடன் மே 22 ல் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு வர வேண்டும்.
இம்முகாமில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து ஆகாது.
தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.
