ADDED : மார் 31, 2026 06:09 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் தனியார் பள்ளியில் மார்ச் 28ல் நடந்தது. 1431 பேருக்கு மாவட்ட தேர்தல் பிரிவு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இயந்திரங்களை கையாள்வது, தேர்தல் விதிமுறைகள் மற்றும் படிவங்களை பூர்த்தி செய்வது குறித்து இந்த பயிற்சியில் விரிவாக விளக்கப்பட இருந்தது.
இதில்150 பேர் பயிற்சிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகினர். தேர்தல் பணி முக்கியமானது என்பதால் பயிற்சியை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி முதல் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நேற்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது.
