/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறையால் சிக்கல்
ADDED : டிச 25, 2024 06:49 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்பு பணியாளர்கள் பற்றாக்குறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் அளவிற்கு பணியாளர்கள் இல்லாமல் பற்றாக்குறை உள்ளது. ஆயிரம் பேர் பராமரிப்பு பணிக்கு இருக்க வேண்டிய இடத்தில் 450 பேர் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
இந்த பணியாளர்களைக் கொண்டு மூன்று ஷிப்டுகள் மூலம் 24 மணி நேரம் பணிபுரிய வேண்டிய நிலை உள்ளது. தற்போது மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை என்பதால் புதிய கட்டடம், பழைய கட்டடம் என நோயாளிகளுக்கான படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதில் சுகாதார தொழிலாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், நோயாளிகளுக்கு உதவி செய்யும் உதவியாளர்கள் என மிகவும் குறைவானவர்களே பணியில் இருப்பதால் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டடங்களை சுகாதாரமாக பராமரிக்க முடியாத நிலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து அதிகளவு பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை செய்ய முயற்சிக்க வேண்டும்.