/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காசநோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி
/
காசநோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி
காசநோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி
காசநோயாளிகளுக்கு புரதச்சத்து உணவு வழங்கும் நிகழ்ச்சி
ADDED : அக் 26, 2024 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை காசநோய் சிகிச்சை பிரிவில் ரோட்டரிகிளப் ஆப் ராம்நாடு சங்கம் சார்பில், நோயினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்குரிய புரதச்சத்து நிறைந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் செல்லவேலு, ரகு, செந்தில்குமார்,சசிகுமார் முன்னிலை வகித்தனர். புரதச்சத்து உணவுகளை நிர்வாகி கீதா வழங்கினார். ரோட்டரி கிளப் ஆப் ராம்நாடு செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் கூரிதாஸ், காசிநாதன் பங்கேற்றனர்.