/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீன்பிடிப்பு தாராளம்
/
ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீன்பிடிப்பு தாராளம்
ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீன்பிடிப்பு தாராளம்
ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீன்பிடிப்பு தாராளம்
ADDED : செப் 25, 2024 01:47 AM

ராமேஸ்வரம்,:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீனவர்கள் தாராளமாக மீன் பிடிப்பதால் மீன்வளம் அழியும் அபாயம் உள்ளது.
மீன்வளத்தை அழிக்கும் இரட்டை மடி, சுருக்கு மடி, ரோலர் மடியில் மீன் பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால் ராமேஸ்வரம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் ஏப்., வரை விசைப்படகு மீனவர்கள் இரட்டை மடியில் மீன்பிடிப்பது வழக்கம். இந்நிலையில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் தடை செய்யப்பட்ட சுருக்கு மடியில் மீன்பிடிக்க நாட்டுப்படகு மீனவர்கள் ஆயத்தமாகினர்.
இதற்காக நேற்று ராமேஸ்வரத்தில் டிராக்டரில் சுருக்கு மடிகளை எடுத்துச் சென்று நாட்டுப்படகில் மீனவர்கள் ஏற்றினர். இந்த வலையில் மீன் பிடிப்பதால் கடலோர மீன்வளம் முற்றிலும் அழிந்து போகும் அபாயம் உள்ளது. இதனை மீன்வளத்துறை அதிகாரிகள் தடுக்காமல் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது என மீனவர்கள் தெரிவித்தனர்.
சி.ஐ.டி.யு., தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் கருணாமூர்த்தி கூறுகையில் ''இரட்டை மடி, சுருக்கு மடியில் மீன்பிடிக்க அரசு தடை விதித்தும் ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி கடலில் இந்த வலைகளில் தாராளமாக மீன் பிடிக்கின்றனர். அதிகாரிகள் ஆசியுடன் தற்போதைய சீசனில் சுருக்கு மடியில் மீன்பிடிக்க உள்ளனர். இதனை தடுக்காவிடில் போராட்டம் நடத்துவோம் ''என்றார்.
ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி கூறுகையில்
''தடை செய்த வலையில் மீன்பிடிக்க யாருக்கும் அனுமதி இல்லை. ராமேஸ்வரம் பகுதியில் சுருக்கு மடியில் மீன்பிடித்தால் சம்பந்தப்பட்ட மீனவர்கள், படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் ''என்றார்.