/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்களுக்கான பசுமை வீடுகளுக்கு திட்ட மதிப்பீடு: குழப்பத்தால் மூன்று ஆண்டுகளாக தொடர் காத்திருப்பு

ADDED : அக் 16, 2025 11:58 PM

மீனவர்களுக்கான பசுமை வீடுகளுக்கு திட்ட மதிப்பீடு பயனாளிகள் ஒவ்வொரு முறையும் மீன்வளத் துறை மற்றும் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்திற்கு வந்து சென்று கேட்டும் பதில் தெரியாததால் தொடர் அலைக்கழிப்பை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு தான் எப்போது என வேதனையில் உள்ளனர்.
இங்குள்ள களிமண்குண்டு, பெரியப் பட்டினம், அத்தியச்சபுரம் உள்ளிட்ட இடங்களில் மீனவர் கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளது.
இப்பகுதி மீனவர் களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் ரூ. 1.70 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் நிலையில் உள்ளது. ஆனால் கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச வீடு களுக்கான தொகை திட்ட மதிப்பீட்டைக் காட்டிலும் மிகவும் குறைவாக இருப்பதால் இத்திட்டத்தை எப்படி செயல்படுத்துவது என்ற குழப்பத்தில் பய னாளிகளும், அதிகாரிகளும் உள்ளனர்.
தினைக்குளத்தைச் சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் நாகராஜன் கூறியதாவது:
மத்திய அரசின் பிரதமரின் வீடுகள் திட்டத்திற்கு ரூ.3.50 லட்சம் வழங்கப்படுகிறது. இதே போன்று மாநில அரசு கட்டக்கூடிய பசுமை வீடு திட்டத்திற்கும் ரூ. 3.50 லட்சம் திட்ட மதிப்பீடு தொகை வருகிறது. ஆனால் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய வீடு கட்டு வதற்கு ரூ.1.70 லட்சம் ஒதுக்கீடு செய்கின்றனர். இதனால் தற்போதுள்ள விலையேற்றத்திற்கு ஏற்ப வீடுகள் கட்டுவது சாத்தியமாகாது.
இது குறித்து திருப்புல்லாணி பி.டி.ஓ., மீன்வளத்துறை உதவி இயக்குனரிடமும் சென்று கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிக்கின்றனர். 31 பேருக்கு வீடு கட்டி கொடுப்பதற்கான திட்டம் இருந்தும் நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர்.
எனவே இத்திட்டத்திற்கான உரிய தொகையை உயர்த்தி வழங்கி எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.