/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடற்கரையோரங்களில் பாதுகாப்பு அரண்: மண்ணரிப்பு தடுக்க பனை, சவுக்கு மரக்காடு
/
மன்னார் வளைகுடா கடற்கரையோரங்களில் பாதுகாப்பு அரண்: மண்ணரிப்பு தடுக்க பனை, சவுக்கு மரக்காடு
மன்னார் வளைகுடா கடற்கரையோரங்களில் பாதுகாப்பு அரண்: மண்ணரிப்பு தடுக்க பனை, சவுக்கு மரக்காடு
மன்னார் வளைகுடா கடற்கரையோரங்களில் பாதுகாப்பு அரண்: மண்ணரிப்பு தடுக்க பனை, சவுக்கு மரக்காடு
ADDED : மே 16, 2025 03:05 AM

சாயல்குடி:- ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடலோரங்களில் மண்ணிரிப்பை தடுக்கும் பாதுகாப்பு அரணாக பனை மரங்கள், சவுக்கு மரக்காடுகள் திகழ்கின்றன.
சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளான ஒப்பிலான், மாரியூர், முந்தல், வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடற்கரையோரங்களில் மிகுதியான அளவு பனை, சவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
இங்கு20 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட சவுக்கு மரங்களும்,40 முதல் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட பனை மரங்களும் இயற்கையாகவே அப்பகுதிக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. மன்னார் வளைகுடா கடலில் பலத்த பேரலைகளின் தாக்கத்தில் காற்றின் வேகத்தால் மண்ணரிப்பு ஏற்படும் போது அவற்றிற்கான காற்று தடுப்பு அரணாகபனை மற்றும் சவுக்கு மரங்கள் திகழ்கின்றன.
இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் அதிகளவு சவுக்கு, பனை மரங்களை நட்டு பராமரித்தனர். அதன் பிறகு மர்ம நபர்களின் மரங்கள் வெட்டுதல் உள்ளிட்ட இயற்கை அழிப்பு நிகழ்வுகளால் பெருவாரியான கடற்கரைப் பகுதிகளில் வெற்றிடமாகவே உள்ளது. இதனை பயன்படுத்தி தனிநபர்களின் ஆக்கிரமிப்பு நடக்கிறது.
எனவே முன்பு உள்ள நடைமுறையை போன்று தற்போதும் மன்னார் வளைகுடா உயிர் கோள காப்பகம், இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கடற்கரையின் மண் அரிப்பை தடுக்கும் விதமாக அரசுக்கு சொந்தமான இடங்களில் மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரிக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு வழங்கும் நிதியை பெற்று சுற்றுப்புற சூழல் சார்ந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசுக்கு சொந்தமான மரங்களை இரவு நேரங்களில் வெட்டி அழித்து கொள்ளை முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை வேண்டும்.
கடற்கரை ஓரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசுபடுகிறது. அது குறித்த விழிப்புணர்வையும் கிராமங்கள் தோறும் ஏற்படுத்த வேண்டும். இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொரு கடற்கரையோர கிராம மக்களின் கடமையாக உள்ளது என்றனர்.