ADDED : செப் 10, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் அனைத்து கைத்தறி நெசவாளர் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் உதவி கைத்தறி இயக்குனரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மோதிலால் தலைமை வகித்தார். கன்வீனர் குப்புசாமி முன்னிலை வகித்தார். பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குனரின் செயல்பாடுகளால் இரண்டு மாதமாக நெசவாளர் சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்காமல் உள்ளதை கண்டித்து கோஷமிட்டனர். மேலும் சேலையின் முழு அடக்க விலைக்கு ஏற்ப ரிபேட் வழங்க வலியுறுத்தினர். இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பெருமாள், ராமச்சந்திரன், முரளி, ஜெய்சங்கர், பாஸ்கரன், சுப்பிரமணியன், ராமநாதன் உட்பட பலர் பேசினர்.
