ADDED : மார் 05, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
தொண்டி: ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக தொண்டி பாவோடி மைதானத்தில் ம.ஜ.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் செய்யதுகவுஸ் தலைமை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பஹ்ருல்லா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் அப்துல்சலாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அத்துமீறல்களை கண்டித்து உரையாற்றினார். நகர செயலாளர் கலந்தர் நன்றி கூறினார்.
