/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் டோல்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ராமேஸ்வரம் டோல்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2025 05:05 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சி டோல்கேட் வழித்தடத்தில்விபத்து ஏற்படுவதை தடுக்க கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார் தலைமை வகித்தார். இதில், ராமேஸ்வரத்திற்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்க நகராட்சி நிர்வாகம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் அமைத்துஉள்ளது.
இந்த டோல்கேட் குறுகிய சாலை பகுதியாக உள்ளதால், உள்ளூர் வண்டிகளுக்கு வரி வசூலிப்பதை தவிர்க்க, இடது புறமாக செல்லும் உள்ளூர் வாகனங்களை வலது புறமாக திருப்பி விடுகின்றனர்.
இதனால் எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே டோல்கேட்டை மாற்று இடத்தில் அமைத்து புதிய வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.