/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 02:44 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க., காங்., கட்சிகள் சார்பில் அம்பேத்கர்குறித்து அவதுாறாகப் பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு தி.மு.க., சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ராமநாதபுரம் நகராட்சி தலைவரான தி.மு.க., வடக்கு நகரச்செயலாளர் கார்மேகம்,தெற்கு நகரச் செயலாளர் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் பிரவின் தங்கம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதே போல ராமநாதபுரம் அரண்மனை அருகே காங்., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்.,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரான நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன்தலைமை வகித்தார். பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன் முன்னிலை வகித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவதுாறாக பேசியது கண்டிக்கத் தக்கது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ., அரசிற்கு எதிராக கோஷமிட்டனர். காங்., மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருப்பு சட்டை அணிந்து..
பரமக்குடி பஸ்ஸ்டாண்ட் முன்பு தி.மு.க., வினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சித் தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். அப்போது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்ததை கண்டித்து எம்.எல்.ஏ., முருகேசன் பேசினார்.
கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், நகராட்சி கவுன்சிலர்கள் ஜீவரத்தினம், மாரியம்மாள், கிட்டு, ராதா, பிரபா, கிருஷ்ணவேணி, சுகன்யா, ஒன்றிய கவுன்சிலர் நதியா, வக்கீல் துரைமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் போகலுார் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை வகித்து கோஷங்களை எழுப்பினார்.
* கீழக்கரை நகர் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., நிர்வாகிகள் ஹமீது சுல்தான், இப்திகார் ஹசன், நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா, கென்னடி, காதர், சாகுல் ஹமீது, சப்ரஸ் நவாஸ், முகமது ஹாஜா சுகைபு உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.