தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்

 குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்

 குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மறியல்


ADDED : ஜூலை 16, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாடானை: அஞ்சுகோட்டை, சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மேலவயல், மணத்திடல், சீவலாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சில ஆண்டுகளாக கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடத்தில் பலமுறை புகார் அளித்தும் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் திருவாடானை-மங்களக்குடி சாலையில் அஞ்சுகோட்டை விலக்கு அருகே திடீரென ரோட்டில் அமர்ந்து பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தடையின்றி குடிநீர் கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இந்த பஸ் மறியலால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us