/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமைச்சர், மாவட்டச் செயலாளருக்கு எதிராக போராட்ட அறிவிப்பு போஸ்டர்
/
அமைச்சர், மாவட்டச் செயலாளருக்கு எதிராக போராட்ட அறிவிப்பு போஸ்டர்
அமைச்சர், மாவட்டச் செயலாளருக்கு எதிராக போராட்ட அறிவிப்பு போஸ்டர்
அமைச்சர், மாவட்டச் செயலாளருக்கு எதிராக போராட்ட அறிவிப்பு போஸ்டர்
ADDED : டிச 25, 2025 05:32 AM
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் மாவட்ட தி.மு.க., நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா, அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்தும் தேவேந்திரகுல வேளாளர் பண்பாட்டு கழகம், கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
முதுகுளத்துார் ஒன்றியத்தில் ஒரு பிரிவை சேர்ந்த மக்களின் 40 ஆயிரம் ஓட்டுகள் இருந்தும் தி.மு.க.,விற்கு பெருவாரியான மக்கள் ஓட்டளித்து வருகிறோம். அப்படி இருந்தும் முதுகுளத்துார் ஒன்றியத்தில் நான்கு ஒன்றிய செயலாளர்களில் ஒருவர் கூட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இல்லை. இதனை கண்டித்து முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுந்தரலிங்கம் சிலை முன்பு நாளை (டிச.,26) காலை 11:00 மணிக்கு மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா, அமைச்சர் ராஜகண்ணப்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த 2021 சட்ட சபை தேர்தலின் போது சிக்கல் ஊராட்சியை பிரித்து தனி ஒன்றியமாக அமைத்து தருவோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத அமைச்சர் ராஜ கண்ணப்பனை கண்டித்து த.ம.மு.க., தேவேந்திர குல வேளாளர் பண்பாட்டு கழகம், கிராம பொதுமக்கள் சார்பில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்கனவே கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.
சமூக நீதி பேசுகின்ற தி.மு.க., அரசு முதுகுளத்துார் ஒன்றியத்தில் புதிய ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பு வழங்குவதில் தேவேந்திர குல வேளாளருக்கு சமூக நீதி பிரதிநிதித்துவம் அளிக்காதது ஏன். மக்களை போராட துாண்டாதே என போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

