/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்திரக்குடியில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
/
சத்திரக்குடியில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
சத்திரக்குடியில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
சத்திரக்குடியில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 04, 2024 07:52 AM

பரமக்குடி, : ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கானா பாடல் பாடிய இசைவாணி குழுவினரை கைது செய்யக் கோரி பரமக்குடி அருகே சத்திரக்குடியில் ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெடியமாணிக்கம் ஐயன் ராஜ கருப்பண்ணசாமி கோயில் ஐயப்ப பக்தர்கள் குழு மணிகண்டன் பூஜாரி தலைமை வகித்தார். செயலாளர் மாதவன் வரவேற்றார். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் 'ஐ ஆம் சாரி ஐயப்பா' என்ற பாடலை பாடி ஒட்டு மொத்த ஐயப்ப பக்தர்களின் மனதை காயப்படுத்தி உள்ளனர்.
மேலும் கார்த்திகை மாதம் துவங்கி ஐயப்பனுக்கு மாலை அணிந்து பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து தரிசனம் செய்கின்றனர். இவர்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் பாடல் பாடியுள்ளனர். ஆகவே இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றனர்.தொடர்ந்து கானா பாடகியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஐயப்ப பக்தர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.