/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 03:12 AM

பரமக்குடி: பரமக்குடி அருகே கஞ்சியேந்தல் ஊராட்சி கீழ பெத்தனேந்தல், புளியங்குளம் கிராம கண்மாய் பகுதியில் அரசு நிர்ணயித்த அளவை மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து நாம் தமிழர் கட்சி மாநில சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் வலனரசு தாசில்தார், ஆர்.டி.ஓ., மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் தர்மகுமார், கோபாலகிருஷ்ணன், முத்துராமலிங்கம், பாலா, ராஜ்குமார் பாரதி என 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். தாசில்தார் பணி நிமித்தமாக வெளியில் சென்றதால் அலுவலக வாயிலில் கோஷங்களை எழுப்பினர்.
பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு. ஆகவே கலைந்து செல்ல கூறினார். பேச்சு வார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்தனர்.

