/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
/
பரமக்குடியில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 26, 2025 03:23 AM

பரமக்குடி: பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி த.மு.மு.க., சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம், மகால்கள் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பிரதான பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது.
இதனை அகற்றக்கோரி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தெற்கு மாவட்ட தலைவர் ராவுத்தர், மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹிம் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் சலி முல்லா கான், மகளிர் பேரவை மாநில துணைச் செயலாளர் சிந்தா ஷேக் மதார், ம.ம.க., மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், பள்ளிவாசல் இமாம் தாஹீர் சைபுதீன் பேசினர்.
அப்போது 6 ஆண்டுகளாக அகற்றப்படாத டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட ஊர்வலமாக கோஷமிட்டபடி சென்றனர். இதையடுத்து அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.