/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் உரிமையை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
கோயில் உரிமையை மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 28, 2025 05:16 AM

ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அனுச்சகுடி காளியம்மன் கோயில்பூர்வீக மக்களின் உரிமையை மீட்டுத்தரக்கோரி கலெக்டர்அலுவலக வளாகத்தில் ஹிந்து மக்கள் நல இயக்கம், ஹிந்து ஜனநாயக பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தனர்.
போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனுச்சகுடி கிராமத்திற்கு பாத்தியப்பட்டகாளியம்மன் கோயிலில் உரிமையுள்ளவர்களை அனுமதிக்கமறுக்கின்றனர்.
வெளிநபர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.பரம்பரையாக உள்ள பூஜாரிகளின் உரிமையை மீட்டுத்தரவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அதன் பிறகுகலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.

