ADDED : பிப் 13, 2026 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து பேசினார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் பழனீஸ்வரன் உட் பட பலர் பங்கேற்றனர்.
பொது விநியோகத்திற்கான தனித்துறை, புதிய ஊதியம் உயர்வு, எடையாளர் நியமனம், ஓய்வூதியம், உணவு பொருட்கள் அனைத்தும் பொட்டல மாக வழங்குதல் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

