/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
/
எமனேஸ்வரம் பள்ளிவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 12, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: ரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பள்ளிவாசல் முன்பு வக்ப் திருத்த சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ., அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஜமாத் தலைவர் அகமது தலைமை வகித்தார். துணைத் தலைவர் முகமது சேட், துணை செயலாளர் கமால் முஸ்தபா முன்னிலை வகித்தனர். ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம், மாவட்டச் செயலாளர் முகமது இலியாஸ் உட்பட பலர் பேசினர்.
அப்போது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் திருத்த சட்டம் 2004 யை கண்டித்தனர். முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்க கொண்டு வந்துள்ள இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.