/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிவாசல்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பள்ளிவாசல்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 13, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம், : வக்ப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஜமாத் தலைவர் ஹாஜா நசுருதீன் தலைமையில் முஸ்லிம்கள் பெரிய பள்ளிவாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஜூம்மா பெரிய பள்ளிவாசல் எதிரில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக ஜமாத்தார்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

