/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமெரிக்காவை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
/
அமெரிக்காவை கண்டித்து ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 04, 2025 04:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: அமெரிக்காவின் வரி விதிப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். கடல் உணவு பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்ததை கண்டித்து ராமேஸ்வரம் தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏ.ஐ.டி.யூ.சி., மீனவர் சங்க மாநில செயலாளர் செந்தில்வேல் தலைமை வகித்தார். மீனவர் சங்க நிர்வாகிகள் ஜோதிபாசு, பூமாரி, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

