/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டம்
/
சாம்சங் தொழிலாளருக்கு ஆதரவாக போராட்டம்
ADDED : அக் 13, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யு., குடிநீர் வடிகால் வாரிய மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் பணிமனை முன்பு நடந்த போராட்டத்திற்கு குடிநீர் வடிகால்வாரிய மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் மலைராஜன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, மாவட்ட நிர்வாகிகள் சுடலைக்காசி, வாசுதேவன், எம்.மணிக்கண்ணு ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க உரிமையை பாதுகாக்க முதல்வர் முன் வர வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ----------