/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனையை இழுத்து மூடும் போராட்டம்
/
அரசு மருத்துவமனையை இழுத்து மூடும் போராட்டம்
ADDED : டிச 15, 2024 09:10 AM

முதுகுளத்துார் :முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் மருத்துவமனையை இழுத்து மூடும் போராட்டம் நடத்தினர்.
நகர் தலைவர் காதர் சுல்தான் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நுாருல் அமீன், மாவட்ட பொதுச் செயலாளர் பாஞ்சுபீர் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு முதுகுளத்துாரை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் பணிபுரிவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் தினந்தோறும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். 50க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் படுக்கை காலியாக உள்ளது.
பிரசவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இல்லாத அவல நிலை உள்ளது.
பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு பிரசவம் பார்க்க முறையான செவிலியர்கள் இல்லாத அவலநிலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை இழுத்து மூடும் போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.