நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்த முத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உயிரிழப்பிற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோஷமிட்டனர்.
மேலும், ஸ்ரீவில்லிபுத்துாரில் தீண்டாமை சுவர் இடிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போலீசார் மீதும், ஆர்.எஸ்.மங்கலம், கைலாச சமூத்திரம் பகுதியில் மயான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.