/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தீயணைப்பு துறையினருக்கு புதிய உபகரணங்கள் வழங்கல்
/
தீயணைப்பு துறையினருக்கு புதிய உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 29, 2025 12:30 AM

ராமநாதபுரம்: ஆப்தமித்ரா திட்டத்தில் பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் வகையில் ரூ.20 லட்சத்தில் புதிய உபகரணங்கள் தீயணைப்பு மீட்புபணிகள் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர்மேலாண்மைத்துறையின் மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள்துறைக்கு உபகரணங்கள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.ஆப்தமித்ரா திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான ரப்பர் படகு,லைட், கையுறைகள் உள்ளிட்ட பேரிடர் காலத்தில் பயன்படுத்தும் 30 வகையான உபகரணங்களை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்கள் சாமிராஜ், கோமதி அமுதா, நிலைய அலுவலர்கள் அருள்ராஜ், நவநீதகிருஷ்ணன், நிலைய போக்குவரத்து அலுவலர் ஜமால் அப்துல்நாசர், வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.