/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்: காத்திருந்து அவதி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்: காத்திருந்து அவதி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்: காத்திருந்து அவதி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்: காத்திருந்து அவதி
ADDED : மார் 07, 2024 05:12 AM

ராமநாதபுரம்: மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை, தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து அலிம்கோ நிறுவனம் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்தது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எம்.பி.,நவாஸ்கனி முன்னிலை வகித்து பேசுகையில், மத்தியசமூக நலத்துறை அமைச்சரிடம் பின்தங்கியராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொடர்ந்து உதவி செய்ய வலியுறுத்தினேன்.
அதன் காரணமாக தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கிடைத்துள்ளது. மத்திய அமைச்சருக்கு நன்றி. முதல்வர் ஸ்டாலின்கட்டுப்பாட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளதால்உங்கள் தேவை நிறைவேற்றித்தரப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் 241 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 29ஆயிரத்தில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதுவலி கருவி, பிரெய்லி கேன், ஊன்றுகோல் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மாவட்டமாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம்,அலிம்கோ நிறுவன துணை மேலாளர் அசோக்குமார் பால்,முட நீக்கியல் பயிற்சியாளர் விஸ்வநாதன், அலுவலர்கள்பங்கேற்றனர்.
காத்திருந்து அவதி
மதியம் 12:00 மணி விழாவிற்கு காலை10:00 மணிக்கே மாற்றுத்திறனாளிகள் வரவழைக்கப்பட்டு கலெக்டர் விஷ்ணுசந்திரன், எம்.பி., நவாஸ்கனி வருகைக்காக மதியம் 12:30 மணி வரை காத்திருந்து சிரமப்பட்டனர்.
எனவே இனிவரும் நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் விழாவை நடத்தஅதிகாரிகள் முன்வர வேண்டும்.

