நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்; துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலத்தில் தி.மு.க., நகர் கழகம் சார்பில் நகர் செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் துாய்மைப் பணியாளர்கள், ஏழை பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், பேரூராட்சி தலைவர் மவுசூரியா உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.