/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்
/
பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்
பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்
பெருநாழியில் மூன்று மாதமாக பி.எஸ்.என்.எல்., சேவை நிறுத்தம்
ADDED : ஜன 15, 2024 04:24 AM
பெருநாழி : -பெருநாழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் அவதிக்குள்ளாகின்றனர்.
பெருநாழி சுற்றுவட்டார கிராமங்களான காடமங்கலம், வெள்ளாங்குளம், இடிவிலக்கி,கோவிலாங்குளம்,எருமைகுளம், டி.வி.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., தொலை தொடர்பு சேவை கடந்த மூன்று மாதங்களாக துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் சேவை, அலைபேசி சேவை வசதி இல்லாததால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவைகளில் சேவை குறைபாடு நிலவுகிறது.
பி.எஸ்.என்.எல்., சிம் பயன்படுத்தி வந்தவர்கள் பயன்பாடு இல்லாததால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சேவையை மாற்றிக் கொண்டுள்ளனர்.
எனவே அரசு அலுவலகங்களில் முக்கிய சேவையாற்றி வரும் பி.எஸ்.என்.எல்., சேவையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பெருநாழி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.