/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது
/
ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது
ADDED : பிப் 28, 2024 01:14 AM

ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் வீட்டு மனை வரன்முறை செய்து அனுமதியளிக்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., சேவுகப்பெருமாள் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த அப்துல்காதர் மகன் முகமது ெஷரீப் ேஷக் 45. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான 8 பிளாட்டுகள் கூரியூர் பகுதியில் தலா 1100 சதுர அடியில் உள்ளது. இதனை வரன்முறைப்படுத்தி மனை அங்கீகாரம் பெற ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ., சேவுகப்பெருமாளை 56, அணுகினார்.
இதற்கு பி.டி.ஓ., ரூ.60 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து முகமது ெஷரீப் ேஷக் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தந்தனர்.
நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்ற முகமது ெஷரிப் ேஷக், அங்கு இருந்த பி.டி.ஓ., சேவுகப்பெருமாளிடம் அந்த ரூ.60 ஆயிரத்தை கொடுத்தார். அவர் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பி.டி.ஓ.,வை கையும், களவுமாகப்பிடித்து கைது செய்தனர்.

