/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது
/
ரூ.10,000 லஞ்சம் வாங்கிய பி.டி.ஓ., கைது
ADDED : செப் 19, 2024 02:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கருங்குளத்தில் உள்ள ஊருணியில் மண் அள்ள, நிலையான்படி கிராமத்தை சேர்ந்த பழனிமுருகன், 35, என்பவர் தாசில்தாரிடம் அனுமதி பெற்றிருந்தார். பி.டி.ஓ., அனுமதியும் பெற வேண்டும் என்பதற்காக, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பழனிமுருகன் சென்றார். பி.டி.ஓ.., கருப்பையா, 52, என்பவர் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசில் பழனிமுருகன் புகார் அளித்தார்.
போலீசார் அவரை கைது செய்தனர்.