/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மண்டபம் அகதிகள் முகாமில் பொது கணக்கு குழு ஆய்வு
/
மண்டபம் அகதிகள் முகாமில் பொது கணக்கு குழு ஆய்வு
ADDED : ஜன 24, 2025 04:22 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் முகாமில் உள்ள இலங்கை அகதிகளை சட்டசபை பொது கணக்கு குழுவினர் சந்தித்தனர்.
நேற்று ராமேஸ்வரம் அருகே பாம்பன் வந்தசட்டசபை பொது கணக்கு குழு தலைவரான தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய மீனவர் காங்., தலைவர் வீடு முன்பு அமைக்கப்பட்ட 100 அடி உயர கம்பத்தில் காங்., கட்சி கொடி ஏற்றினார். பின் தனுஷ்கோடியில் ஆமை முட்டைகள் பொறிக்கும் காப்பகத்தை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதன் பின் மண்டபம் முகாமில் வசிக்கும் இலங்கை அகதிகளை செல்வப்பெருந்தகை, கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன், அதிகாரிகள் சந்தித்து பேசினர். முகாமில் வீடுகள், சாலை வசதி மருத்துவ வசதி மோசமாக உள்ளதாகவும், குழந்தைகளின் உயர்கல்விக்கு ஆதார் அட்டை இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாத சூழல் உள்ளது என அகதிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சட்ட சபையில் அறிக்கை சமர்ப்பிப்பதாக செல்வப்பெருந்தகை உறுதி அளித்தார்.

