நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பொது விருந்து நடந்தது.
இதையடுத்து கோயிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இணை ஆணையர் சிவராம்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, பொதுமக்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர். பின் கோயில் அன்னதான கூடத்தில் நடந்த பொது விருந்தில் ஏராளமானோர் மதிய உணவு அருந்தினர்.

