/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பனை மரம் வெட்டுவதை கண்டித்து பொதுக்கூட்டம்
/
பனை மரம் வெட்டுவதை கண்டித்து பொதுக்கூட்டம்
ADDED : ஏப் 22, 2025 05:45 AM
சாயல்குடி: -சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விளை நிலங்களை அழித்து உப்பளங்களாக மாற்றுவதை கண்டித்தும், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு பனை மரங்கள் வெட்டப்படுவதை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தலைமை வகித்தார். மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அனீஸ் பாத்திமா முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அலங்கை வினோத் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
கடலாடி மற்றும் சாயல்குடி நிர்வாகிகள் பழனி முருகன், வெங்கடேஷ், அருள்ராஜ், சதாம் உசேன், ஆல்பர்ட், காமராஜ் உள்ளிட்ட நா.த.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயாஸ் அகமது நன்றி கூறினார்.