/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒதுக்கப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்: டி.எஸ்.பி., அறிவுறுத்தல்

ADDED : மார் 18, 2024 06:34 AM
திருவாடானை : திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்த இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்விடங்களில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும் என டி.எஸ்.பி. நிரேஷ் கூறினார்.
அவர் கூறியதாவது- லோக்சபா தேதி அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் தெருமுனை பிரசாரம் நடத்த இடங்கள் ஒதுக்கபட்டுள்ளது.
அந்த இடத்தில் மட்டுமே கூட்டம் நடத்த அனுமதிக்கபடும்.
திருவாடானையில் தெற்கு தெரு மாரியம்மன், வடக்குதெருவில் துரவுபதை அம்மன், சின்னக்கீரமங்கலத்தில் தேவகோட்டை ரோடு, தொண்டியில் பாவோடி மைதானம், பஸ்ஸ்டாண்ட் ஆலமரம், நம்புதாளை ஊராட்சி அலுவலகம், எஸ்.பி.பட்டினம் பஸ்ஸ்டாப், வெள்ளையபுரம் பஸ்ஸ்டாப், ஆர்.எஸ்.மங்கலம் அண்ணாதிடல், சனவேலி பஸ்ஸ்டாப், திருப்பாலைக்குடி பஸ்ஸ்டாப், உப்பூர் பஸ்ஸ்டாப், சோழந்துார் பஸ்ஸ்டாப், இந்திரா நகர் பஸ்ஸ்டாப், தேவிபட்டினம் சத்திரம் மற்றும் தேவிபட்டினம் பள்ளிவாசல் அருகில் ஆகிய இடங்கள் பொதுக்கூட்டம் நடத்த ஒதுக்கபட்டுள்ளது.
தெருமுனை பிரசாரத்திற்கு திருவாடானை ஓரியூர் விலக்கு, தெற்கு தெரு சூச்சனி விலக்கு, சின்னக்கீரமங்கலம் திருவாடானை ரோடு, தொண்டி வட்டாணம் விலக்கு ஆகிய இடங்களிலும் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஒதுக்கபட்ட இடங்களிலும் தெருமுனை பிரசாரம் நடத்தலாம் என்றார்.