/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெரு பெயரை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
/
தெரு பெயரை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : மார் 09, 2024 08:42 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி 14வது வார்டு நாகநாதபுரம் புதுத்தெருவை கான்சாகிப் தெரு என மாற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ராநமாதபுரம் நகராட்சியில் நேற்று முன்தினம் நடந்த அவசரக்கூட்டத்தில்14, 15 வது வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பட்டா, பத்திரம், கடவுச்சீட்டுகளில் கான்சாகிப் தெரு என அழைக்கப்படும் பகுதிகளில் நகராட்சி வரி ரசீதில் மட்டும் நாகநாதபுரம் புதுத்தெரு, புதுக்குடியிருப்பு என பதிவாகியுள்ளது.
வரி ரசீதிலும் கான்காசிப் தெரு என பதிவதற்கு தீர்மானம் நிறைவேற்றினர்.
இதற்கு 14வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி (சுயேச்சை) எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.
அவரை தொடர்ந்து நாகநாதபுரம் புதுத்தெரு மக்களும் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியைச் சேர்ந்த ஆர்.சரவணன், வி.கமலக்கண்ணன், எம்.விஷ்ணுபிரியா ஆகியோர் கூறுகையில், நாகநாதபுரம் புதுத்தெரு மக்களிடம் கருத்து கேட்பு நடத்தாமல் எங்கள் தெருவை கான்காசிப் தெரு என பெயர் மாற்றம் செய்ய நகராட்சியில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதனை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றனர்.