/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவுநீரால் குளம் மாசு, ரோடு சேதம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
/
கழிவுநீரால் குளம் மாசு, ரோடு சேதம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
கழிவுநீரால் குளம் மாசு, ரோடு சேதம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
கழிவுநீரால் குளம் மாசு, ரோடு சேதம் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
ADDED : ஜன 30, 2024 12:18 AM

ராமநாதபுரம், - ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் குளத்தை மாசுப்படுத்தும் நிறுவனத்தை மூட வேண்டும். தொட்டியப்பட்டி தார்சாலை சேதம் என பல்வேறு கோரிக்கை, புகார் மனுக்களை மக்கள் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
சாலை வசதியின்றி அவதி
கடலாடி தாலுகா சிக்கல் ஊராட்சி தொட்டியப்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில், ஊரின் சாலை சேதமடைந்து குண்டும்குழியுமாக உள்ளது. இதனால் மாணவர்கள், குடிநீர் எடுக்க செல்லும் மக்கள் வாகனங்களில் செல்ல முடியவில்லை. நடந்துசெல்ல கூட சிரமப்படுகின்றனர். பலமுறை மனு அளித்தும் பலனில்லை. சாலை அமைக்கவில்லை என்றால் போராட்டம் செய்வோம் என்றனர்.
குளம் மாசு, கால்நடை பாதிப்பு
திருவாடானை தாலுகா குணவதிமங்களம் மக்கள் அளித்த மனுவில், விவசாயநிலத்தில் பாழ்படுத்தும் உப்புதண்ணீரை நன்னீராக்கும் தனியார் நிறுனத்தை மூட வேண்டும். குளத்தில் ரசாயணக் கழிவுநீர் கலப்பதால், அங்கு தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் நோய் வாய்ப்பட்டு இறக்கின்றன. எனவே தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தேசியக்கொடியுடன் மனு
பரமக்குடி சுந்தராஜன்பட்டியை சேர்ந்த தர்மராஜ் தேசியக்கொடியுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளிக்க வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனைக்கு பிறகு அனுமதித்தனர். அவரது மனுவில் ஆயிர வைசிய சபை 2022 தேர்தலில் எனது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், வாபஸ் பெற்றதாக போலியாக எனது கையெழுத்தை போட்டுள்ளனர். கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
கோயிலை மீட்க கோரிக்கை
மதுரையை சேர்ந்த பெரியசாமி, கீழக்கரை தாலுகா புதுக்குளம் ஊர் மக்களுடன் இணைந்து புதுக்குளம் முனியசாமி கோயில் சிலைகளை அகற்றி மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து எங்கள் கோயிலை மீட்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுபோல பட்டாமாறுதல், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மகளிர் உரிமைத்தொகை என பல்வேறு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.