/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
/
திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
ADDED : நவ 13, 2024 05:08 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்துார் பிர்காவுக்கு உட்பட்ட திருத்தேர்வளையில் நாளை ( நவ.14) கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடக்கிறது.
எனவே திருத்தேர்வளை , ஆனந்துார், ஆயங்குடி, கீழக்கோட்டை, கப்பகுடி, கரவளத்தி, நாடார் கோட்டை, பொட்டக்காடு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் திருத்தேர்வளை சமுதாய கூடத்தில் காலை 10:00 மணிக்கு நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.
பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை மற்றும் கிராம பகுதிகளுக்கான அடிப்படைத் தேவைகள் உள்ளிட்டவைகள் குறித்து மனுக்கள் அளித்து பயனடையலாம் என ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் (பொறுப்பு) உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.