/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தும்படைக்காகோட்டையில் மக்கள் தொடர்பு திட்டம்
/
தும்படைக்காகோட்டையில் மக்கள் தொடர்பு திட்டம்
ADDED : ஜன 29, 2024 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே தும்படைக்காகோட்டையில் ஆர்.டி.ஓ., கோபு தலைமையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. தும்படைக்காகோட்டை ஊராட்சி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, தையல் இயந்திரம் என 46 பேருக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தாசில்தார் சுவாமிநாதன், யூனியன் தலைவர் ராதிகா, தாட்கோ மேலாளர் தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.