ADDED : ஜூலை 24, 2025 10:24 PM
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே களரி ஊராட்சி இ-சேவை மைய கட்டடத்தில் உங்களுடன் ஸ்டாலின் எனும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை உள்ளிட்ட 16 துறைகளும் பங்கேற்றனர். 42 வகையான மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ., ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கீழக்கரை தாசில்தார் ஜமால் முகமது முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., கோட்டை இளங்கோவன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன், மன்சூர் அலி, ஆர்.ஐ., கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை களரி ஊராட்சி செயலர் ஜெயபால், உத்தரகோசமங்கை ஊராட்சி செயலர் கல்யாண சுந்தரம் ஆகியோர் செய்திருந்தனர்.