ADDED : ஜன 02, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி போலீசார் சார்பில் 2026 புத்தாண்டையொட்டி போலீஸ், பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ரோடுகளில் கேக் கொண்டாடினார்கள்.
பரமக்குடி டி.எஸ்.பி., ஜெபராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன், தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், எமனேஸ்வரம் மகாலட்சுமி, நயினார்கோவில் சுதர்சன், சத்திரக்குடி வலம்புரி, பார்த்திபனுார் கமல் ஆகிய போலீசார் கேக் வெட்டி கொண்டாடினர். பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
