ADDED : அக் 19, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் ஐப்பசி மாத சிறப்பு பூஜை நடந்தது.
குழு தலைவர் குருசாமி தலைமை வகித்தார். குருநாதர் திருமால் முன்னிலை வகித்தார். காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, பூஜை நடந்தது. பின்பு படிபூஜை, பஜனை நடந்தது. முதுவை சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோன்று முதுகுளத்துார், கமுதி பகுதியில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜை நடந்தது.