ADDED : பிப் 16, 2026 05:10 AM

அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நாளையொட்டி முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே சேதுசீமை பட்டாளம் முதுகுளத்துார் கிளை சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். முன்னாள் ராணுவ வீரர்கள் கருப்புசாமி, ராமர், காசிலிங்கம், நாகமுத்து முன்னிலை வகித்தனர்.
அங்கு வைக்கப்பட்டுள்ள திருவுருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செய்தனர். ராணுவ வீரர்கள் மவுன அஞ்சலியும், வீரவணக்கம் செலுத்தினர். இதில் முன்னாள் ஆசிரியர் ராமகிருஷ்ணன், முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள், போலீசார்,மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோன்று கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே சேதுசீமை பட்டாளம் கமுதி கிளை சார்பில் ராணுவ வீரர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
